புரிந்து கொஞ்சம் நடந்திடடா
காலையில் தானே
கரம் பிடித்தோம்
காதலனே கொஞ்சம்
பொருத்திடடா.
செய்முறைத் தேர்விற்கு
நேரம் வரும்
சில மணி நேரம்
காத்திருடா .
ஆசையக் கொஞசம்
முடக்கி விட்டு
அவசரப் புத்தியை
அடக்கி விடு.
பசியாறத் தானே அங்கே
பந்தி நடக்கிறது
விழியாலே இங்கென்ன
விருந்து கலக்கின்றாய் ?
உரசியது போதும்
ஒதுங்கி நில்லேன்.
உதடுகளை விட்டால்
உனக்கு உணவா இல்லை ?
கைகளைச் சமர்த்தாய்
வைத்துக் கொண்டு
கால்களைத் கொஞ்சம்
தள்ளி வை நீ !
நீ மட்டும் தான் இங்கே
நெருப்பாய் எரிகிறாயா ?
நானுந்தான் உள்ளே
தணலாய்த் தகிக்கிறேன்.
புரியாத பயலே
பொருத்திடடா
புத்தியில் கொஞ்சம்
இருத்திடடா .
நல்லிரவு வந்தபின்னர்
நாமிருவர் தானே!!
கலந்து உறவாடிக்
களிப்புருவோம் தானே !!