நினைக்காமல்க முடியவில்லை பாகம் மூன்று
நிலவோடு விளையாடும்
இரவும் நினைவோடு
விளையாடும் உறவும்
கேட்டிராத புத்திதமான
இசைதனை என்னில்
மீட்டிக்கொண்டே இருக்கிறது
ஏக்கங்கள்யாவும் மின்னலென
தோன்றி மின்மினி பூச்சியாய்
மறைந்துவிடுகிறது நல்ல
சிந்தனையில் கெட்ட
கனவுகளாய் அவளின்
நினைவுகள் வந்தே செல்கிறது
வறண்ட நிலத்தை மீண்டும்
வாட்டுகின்ற கோடையாய்
உறங்கவிடாமலே மனதை
உந்திக்கொண்டிடுக்கிறது
உணர்வுகளோடு மறைமுக
யுத்தம் உயிரை உறையவைக்க
எண்ணங்கள் சிதறடித்து
சிறகடித்து பறக்கும் மனம்
நினைவுகளின் மீட்டலோடு,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....