காதல் கவிதை

காதல் என்ற ஒற்றை சொல்லே
கவிதைக்கு உரிப்பொருள்
கற்பனைக்கு கருப்பொருள்
காதல் விசையினூடே
பல காவியம் பிறந்ததிங்கு...
காற்றில்லா வாழ்வும் சாத்தியம்
காதலில்லா வாழ்வே இல்லை
இது சத்தியம்
ஆதாம் ஏவால் முதல் காதல் தொடங்கி
பல யுகங்களை கடந்து
காதல் காதலுடனே
வாழ்ந்து கொண்டிருக்கிறது
காதல் கவிதை எழுதும் போது
காகிதமும் ரசிக்கிறது
மையும் கண்டு சிரிக்கிறதுi