விதியின் விளையாட்டு7

மதனிடம் நின்று சொன்ன அந்த பெண்ணின் வார்த்தைகள் ரிஷானியின் காதில் தீப்பொறியாய் அடித்துக்கொண்டிருந்தது.

அவளால் வகுப்பை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை;

நல்லவன் என்று நினைத்து மனதை அலைபாய விட்டுவிட்டோமோ?
என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டாள்,,,,,,,,

முதல் அனுபவம் என்பதால் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள்.

1மணி நேரம் விடுப்பு கேட்டு விட்டு ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள் உடன் அவள் தோழி ப்ரியாவும் சென்றாள்.

போகும் போது மதனின் வகுப்பை திரும்பி பார்த்தவள் மதனும் ஏதோ இழந்தவன் மாதிரி மௌனமாக இருந்தான்.

ரிஷானி போனதை அவனது நண்பன் கவனித்து அவனிடம் சொன்னான்.
அவனுக்கு அவளை உடனே பார்க்க தோன்றாமல் அப்படியே இருந்துவிட்டான்.


ரிஷானி தன் தோழியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள்.

"மதன் என் அக்கா கூட படித்தவன்தான்டி நான் விசாரிச்சி சொல்றேன்"நீ இதுக்கெல்லாம் வருத்தப்படாதே என்று ஆறுதல் படுத்தினாள்.

இல்லடி வேண்டாம் "கழுத்துக்கு வந்த கத்தி கையோட போச்சின்னு நினைச்சிக்க வேண்டியதுதான்" என்று வெறும் வார்த்தைகளில் அனலை உதிர்த்தாள் ரிஷானி!!!

மனதில் அழகிய தாஜ்மஹாலை கட்டி வைத்த ரிஷானி இன்று மதனால் அது உடைந்து தரை மட்டமானதை உணர்ந்தாள்...........

சரி பரவாயில்லை வா வகுப்பிற்கு செல்லலாம் என் தோழி அழைத்தாள், இல்ல நீ போ நான் வரவில்லை என்று பிடிவாதமாக சொன்னாள் ரிஷானி.

சரி நான் போறேன் என்று அவள் தோழி ப்ரியா வகுப்பிற்கு கிளம்பினாள்.


ரிஷானி அன்று வகுப்பிற்கு செல்லவில்லை இறுதி வகுப்பு முடிந்ததும் மதன் ரிஷானியைக்காண வந்தான் ஆனால் ரிஷானி இல்லை ப்ரியாவிடம் விசாரித்தான் அவளுக்கு தலைவலி அதனால் ரெஸ்ட் ரூமில் இருக்கிறாள் இனிதான் அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லி விட்டு அவள் கிளம்பத்தயாரானாள்.....



சரி என்றவன் வெளியே சென்று ரிஷானியிடம் உன்கிட்ட ஒரு விஷயத்தைப்பற்றி பேசணும் என்றான் தாழ்வான குரலில்........

அவளோ! அவனது பேச்சை காதில் வாங்கிக்கொள்ளவில்லை, எதையும் கண்டுக்காதவளாய் தன் கையிலிருந்த(மதன் கொடுத்த புத்தகம்) அவன் மேல் எறிந்து விட்டு அங்கிருந்து சென்றாள்!!!!!!!!!!!!

இது அனைத்தையும் அங்கிருந்த 2பேர் பார்த்து ரசித்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தனர்..............





விதி தொடரும்................

எழுதியவர் : ப்ரியா (6-Mar-14, 2:27 pm)
பார்வை : 322

மேலே