பெண்மையின் பொறுமை - வானொலி நாடகம்
வர்ணனைகள் இன்றி வசனங்களை மட்டும் கொண்டு ஒரு சிறுகதை. படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் என் முயற்ச்சிக்கு கிடைத்த வெகுமதியாக மகிழ்வேன் - மணியன்.
**** பெண் ****
அம்மா. . . . பால். . . .
இதோ வந்துட்டேன் பால்காரரே.
என்னம்மா தூங்கிட்டீங்களா ?, எத்தனை சத்தம் குடுக்கிறது ?, நான் நாலு வூடு போவேனாமா ?,
மன்னிச்சுக்கோரும். . கொஞ்சம் அசதியில அசந்து தூங்கிட்டேன். . சிந்தாம ஊத்தும், .
போனமாசமே பாலுக்கு துட்டு வரல.ிந்த மாசம்.சேர்த்து குடுங்க. .
இன்னும் ரெண்டு நாள்ல தந்துடறேன். . கொஞ்சம் பொருத்துக்கோங்க. . .
*** *** ***
என்னங்க. . இந்தாங்க காபி. . எழுந்திருங்க. .
பாத்ரூம்ல வெந்நீர் ரெடியா இருக்கு. . டவல் பிரஷ் எல்லாம் வச்சுட்டேன். .
டேய் கணேஷ். . கவிதா. . எழுந்திருங்க. அப்புறம் ஸ்கூல் ஆட்டோ போயிடப் போவுது. . .
*** *** ***
ஏன்டி. . மணி இப்பவே,9 ஆயிடுச்சு. . சைக்கிள் வேற காத்து இறங்குது. . இன்னுமா டிபன் ரெடி பண்ணுற. . இந்த மாசமாவது . சைக்கிள் டயர் டியூப் மாற்றனும். . .
இதோ ரெடிங்க. . சைக்கிள் ரிப்பேர் பார்த்துடலாம்.வீடு காட்டுறேன் . . வீடு காட்டுறேன்னு ராத்திரி வரைக்கும் அலையாதீங்க. . கொஞ்சம் சீக்கிரமா வந்துடுங்க. நான் வர்றதுக்குள்ள பசங்க ஸ்கூல்ல இருந்து வந்துட்டா. . பாவம் வீட்டுக்கு வெளியே காத்திருப்பாங்க.
வீட்டு புரோக்கருனா அப்படித்தான் தெருத் தெருவா அலைய வேண்டி இருக்கும். . சரி. சரி. . நான் கிளம்புறேன்.நீயும் ஆபீஸ் கிளம்பு. .
அம்மா. . ஸ்கூல் எக்ஸாம் பீஸ் கட்டனும்மா. நாளைக்கு கடைசி நாள். . ஆ. . ஆ. . .
ஏன்டா ஜிப் போடும் போது பார்த்துப் போடவேணாம்.அழாதே. . அம்மா போட்டு விடுறேன். . . கண்ணைத் துடைச்சுக்கோ. . அடடா. . ஆட்டோ வந்துடுச்சு பாரு . டாட்டா. . . .
*** *** ***
என்னங்க 7 ஏ பஸ் போயிடுச்சா. .
இன்னும் வரலை. . . முகம் வேர்த்து வடியுது.
கொஞ்சம் தொடைச்சக்கோங்க. . அதோ பஸ் வந்துடுச்சு. . அடப் பாவமே. . படி வரைக்கும் தொங்கின்டு வர்றாளே. . .
ஏம்மா. . . 5 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா கொடுத்தால் எப்படிம்மா. . . . ஏம்பா மஞ்சள் சட்டை கொஞ்சம் முன்னாடி போப்பா. . .
மிஸ்டர். . . கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உரசுன்னா எப்படி. . .
அடடே. . இவ தங்கம் பாரு. . உரசுரோமாம்ல. பஸ்சுன்னா கூட்டத்துல அப்படி இப்படித்தான் இருக்கும். அவ்வளவு கஷ்டமா இருந்தா ஆட்டோ.புடுச்சி போக வேண்டுயது தானே. .
*** *** ***
ஏய் . . கமலா. . ஏன்டி லேட்டு. . நீ வந்த உடனே
சுனாமி உன்னை வரச் சொல்லிச்சு. போய்ப் பாரு.
வணக்கம் சார். . கொஞ்சம் லேட் ஆயிடுத்து. .
என்னவோ இன்னைக்குத்தான் லேட்டா வருகிற மாதிரி சொல்லுறீங்க. . .அது இருக்கட்டும். . நேற்று மதன் எண்டெர்பிரைசசுக்கு பில் காபி கொரியர் பண்ணச் சொன்னேனே பண்ணியாச்சா. .
சாரி சார். . . நேற்று கொஞ்சம் வேலை அதிகம் . டைமும்.ஆயிடுத்து.அதான் இன்று பண்ணிடலாமுன்னு. . . . .
டைம் பார்த்து வேலை செய்யறதுன்னா. .கவருமென்டு வேலைக்குப் போயிருக்க வேண்டியது தானே. . எதுக்கெடுத்தாலும் ஒரு நொட்டை சொல்லிகிட்டு. . ஏம்மா இப்படி உயிரை வாங்குறீங்க. . .
சாரி சார். . இப்ப உடனே முதல் வேலையா அதை முடிச்சிடறேன்.
சரி. . . சரி. . .
அட ஏன் இன்னும் நின்னுகிட்டிருக்கீங்க. . . .
சார். . . வந்து. . . லோன் கேட்டிருந்தேன்.
உங்க காரியத்துல மட்டும் கரெக்டா இருங்க. .
ஹெட் ஆபீசுக்கு அனுப்பி இருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் வந்தாலும் வரலாம். . .
ஏன்டி. . அழுத மாதிரி இருக்க. . சுனாமி திட்டுச்சா. . . அது கிடக்கு விடுடி. . கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே. . 500 ரூபா என்னிடம் வாங்கினே. .போன மாசமே தந்துடறேன்னு சொன்னே. .. ப்ளீஸ் . . ஒரு ரெண்டு நாளைக்குள்ள ரெடி பண்ணுடி. .மாமனாருக்கு மருந்து மாத்திரை வாங்கனும். .
ரெண்டு நாளில் தந்துடறேன். .
*** *** ***
ஏன்டி கமலா. . மணி 6 ஆயிடுத்து. .இன்னும் நீ கிளம்பலையா. . .
நீ போ. . கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு கிளம்பனும். . . .
*** *** ***
ஏம்மா. . . இப்படியா ஓடி வந்து ஏறுவது. . .பஸ் நிக்கும்.போதே ஏற வேண்டியது தானே. . . கீழே விழுந்து தொலைச்சால் என்ன ஆவறது. .
போலாம். . ரைட். . . .
**** *** ****
ஏம்மா . . இவ்வளவு நேரம். . வாசலிலேயே எவ்வளவு நேரமா ரெண்டு பேரும் உக்கார்ந்துருக்கோம். அப்பாவும் இன்னும் வரல. .
கொஞ்சம் பொருடா செல்லம். இதோ ஒரு நொடியில காபி போட்டு தர்றேன். .
அய்யா. . . அப்பா வந்தாச்சு. . . .
*** *** ***
ஏன்டி மணி 11 ஆகுதடி. . . இன்னும் சமையல் கட்டுல என்னடி பண்ணுற. . .
தயிர் உறை ஊத்த வேண்டி இருந்துச்சு. .
என்ன சொல்லுங்க. . . . விடுங்க பசங்க முழிச்சிடப் போறாங்க. .
அவங்க தூங்கி 1 மணி நேரமாச்சு. . . ம். . ம். .
அய்யோ.விடுங்க விளக்கை அணைச்சுட்டு வர்றேன்.
*-*-*-*-* *-*-*-* *-*-*-*-*-* *-*-*-*-*
தள்ளி வைக்க வேண்டி வராத கடன்களைப் போல் கிடையாது. பெண்மையின் சேவை. . என்றும்
புனிதமானது.
அன்புடன் மணியன்.
**************************