செறுக்கு

வைகுண்டத்தில் ஒரு நாள் பரந்தாமன் தமது பாதுகைகளை பள்ளியறைக்குள் விடுத்து பாம்பணையில் படுத்தார் :...அதனை கண்ணுற்ற பரந்தாமனின் திருமுடிக்கு கோபம் உண்டாயிற்று !
'' ஏ பாதுகையே !....கண்ட இடமெல்லாம் மிதிக்கும் நீ எப்படி பள்ளியறைக்குள் வரலாம் ?.....வெளியே போ ?''
என்றது :..பதிலுக்கு பாதுகை ,
'' நானாக வரவில்லை ....பகவானின் திருப்பாதங்கள் தான் உள்ளே விட்டது !''
என்றது பரிதாபமாக :
'' நான் பகவானின் சிரசின் மேல் இருப்பவன் !...நான் சொல்கிறேன் ....வெளியே போ !''
என்று செருக்குடன் கூறியது திருமுடி : இப்போது பாதுகை பொறுக்க முடியாமல் ,
'' திருமுடியே ....என்னை விரட்டாதே .....பகவானின் அடியார்கள் ஐயனின் பாதத்தையே தரிசிக்கிறார்கள் ! ''
என்று கூற .....இதனை கேட்டுக்கொண்டிருந்த சங்கும் , சக்கரமும்
'' பாதுகையே வெளியே போ ''
என்றன :...வருத்தமுற்ற பாதுகை பகவானை பார்த்து '
'' கருணைக்கடலே !....இவர்கள் என்னை கேவலமாக பேசுவது தங்கள் செவிகளில் விழவில்லையா ?''
என்று கதறியது :அப்போது பகவான் ,
'' பாதுகையே ....வருந்தாதே ...அவர்கள் உன்னை பூஜிக்கும் காலம் நெருங்கி விட்டது !..''என்றவர் திருமுடியை பார்த்து ,
'' திருமுடியே ....நீ தற்பெருமை பேசியதால் , அடுத்து நான் எடுக்கப்போகும் ராமாவதாரத்தில் 14 வருடங்கள் இந்த பாதுகையின் மீது இருப்பாய் !...சங்கே ! சக்கரமே !..நீங்கள் பாதுகையை இகழ்ந்ததால் ...ராமாவதரத்தின் போது பாரத , சத்ருக்கனராக பிறந்து பாதுகையை 14 ஆண்டுகள் வழிபடுவீர்கள் !''
என்றார் :
இது அப்படியே நிகழ்ந்தது !...பாதுகை சிம்மாசனம் ஏறி மணிமகுடம் தரித்தது !
பாரத , சத்ருக்கனர் 14 ஆண்டுகள் அந்த பாதுகையை பூஜித்து வழிபட்டனர் !

எழுதியவர் : முரளிதரன் (5-Mar-14, 5:50 pm)
பார்வை : 242

மேலே