நன்றி மழையே…

பர பரக்கும் காலை வேளை…
பம்பரமாய் சுழன்று…
அடுப்படி வேலையை…
அசதியாய் முடித்து…!!!

தூங்கிய குழந்தையை…
கொஞ்சலுடன் எழுப்பி…!
சிங்கார சிட்டை சிணுங்களுடன் குழிக்க வைத்து…!!!

பள்ளி சீருடையில்…
அழகு பார்த்து…!

கொஞ்சம் கதை பேசி …
கொஞ்சும் கிளிக்கு உணவளித்து…!!!

மதிய வேளைக்கு…
அடைக்கப்பட்ட உணவுகளை…
பத்திரமாய் பக்குவபடுத்தி…!
நிமிர்கையில்…!

நேரம் பளளி துவங்கும் நேரத்தை…
தொடட்டுமா என்று…
தொடர்ந்து மிரட்ட…!
அதை கண்களால் கண்டித்து…!

ஒரு கையில்
என் செல்ல பிள்ளையின் கை பிடித்து…!
மறு கையில் - அவளின்
புத்தக பையை…
தூக்கி கொண்டு…!
நான் பயணப்பட…
என் இயந்திர பறவையை நோக்கி விரைய…!!!

அம்மா…!
என் எழுதுகோலை காணவில்லை என்று …
என்னவள் சிணுங்க…!
எடுத்து வர திரும்புகையில்…!
மறுபடியும் துரத்திய நேரத்தை…
அவசரத்துடன் பார்த்து…!
மீண்டும்…
நான் பயணப்பட ஆரம்பிக்கையில்…!

மேக தூதன் மேல் பட்ட குழிர்ந்த காற்று…
மெல்லிய சாரலாய் மாறி…!
சற்றென்று எங்களை நனைக்க…!
வேலை பழுவினால் வியர்த்து போயிருந்த நான்...
ஒரு நிமிடம் விழி மூடி...
அன்னாந்து வான் துளிகளை..
விரும்பி ஏற்றேன்…!!!
உள்ளம் குழிர்ந்து போனது...
என் வியர்வையும் கரைந்து போனது…!!!
பல துரத்தலுக்கு நடுவில்…!

அத்தனை அவசரங்களும, அசதிகளும்…
தூசியாய் தட்டப்பட்டு…
துணிவாய் தொடங்கினேன் இன்றைய பொழுதை…!!!

நன்றி மழையே…!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Mar-14, 2:29 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 51

மேலே