தெளிந்த வானம்
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
*
மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…