ப்ரியமான தோழி 15 வது ஆண்டு விழா

பறந்தோடியது ஈரேழு வருடம்
ப்ரியமான தோழி மலர்ந்து ..!
பதினைந்தாம் ஆண்டு பிறந்ததின்று
பரவசமானோம் தோழியர் கண்டு ...!!

விலையில்லா சஞ்சிகை நீ
விலைமதிப்பில்லா இதழும் நீ
கலைமகளின் திரு வருளாலே
கலைமாமணி ராதுவின் வரமாய்நீ ...!!

மகளிர் தினத்தில் உதித்தாய்
மங்கையர் மனதில் நிறைந்தாய்
மாதம் ஒருமுறை பிறந்தாய்
மாணிக்க பரலாய் மிளிர்ந்தாய் ...!!

நன்னெறி நயமுடன் போதித்தாய்
நளபாகம் நலமுடன் கற்பித்தாய்
ஆன்மிகம் பக்தியுடன் அறியவைத்தாய்
அரிய கலைகள் ஆராதித்தாய் ....!!

புதுமைகள் பல புகுத்திட்டாய்
போட்டிகள் பல நடத்திட்டாய்
பரிசுகள் மழையாய் பெய்வித்தாய்
பெண்கள் உள்ளம் குளிர்வித்தாய் ...!!

நல்வாழ்வுக்கு வழி காட்டினாய் !
சுயதொழிலுக்கு உதவி கூட்டினாய் !
ஆதரவற்றோர்க்கு கரம் நீட்டினாய்
தாயினும் பரிந்து ஊட்டினாய் ....!!

இலக்கியப் பணியுடன் இறைபணியும்
இருகண்கள் போலே தொடர்ந்திருக்கும்
ப்ரியாகிஷோரின் வழி காட்டலுடன்
ப்ரியமானதோழி பல்லாண்டு வாழி !வாழி !!!

(ப்ரியமான தோழி - இலவச மாத இதழ் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Mar-14, 11:21 pm)
பார்வை : 565

மேலே