நண்பர்கள்
நண்பர்கள்…
*
தாயுமாகி உதவிச் செய்தத் தியாக முகம்
ஓயாது என்றும் துணையிருந்தத் துறைமுகம்
நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த திருமுகம்
அன்பு முகமானக் கீதா ஆறுமுகம்.
*
சாமியை வணங்காத நாத்திகச் சாமி
ஓமக்குச்சி உடல் தேகச் சாமி்
இசைப் பாடல் பாடும் அய்யா சாமி.
மீசைத் தடவிப் பேசிடும் முனுசாமி.
*
தீயப் பழக்க மில்லாதத் திகம்பரச் சாமி
மெல்ல உதட்டில் சிரிக்கும் மௌனச் சாமி.
கரும்பாய் பேசிப்பேசி இனிக்கும் நல்லச் சாமி.
குறும்புத் தம்பிச் சுறுசுறுப்புக் குப்புச் சாமி.
*
ஊரில் நடக்கும் குசும்பு சம்பவங்களை
உணர்ச்சித் தூண்டும் பாவளையில்
புணர்ச்சிக் கதைகள் சொல்லிச் சொல்லி
உறங்காமல் செய்வார் சுப்பைய்யா வாத்தியயார்.
*
,இன்னும் பலப்பல இனிய நண்பர்கள்
இவ்வணியில் உண்டு நிறையச் சொல்லிடவே
இன்று எங்கெங்கோ இருக்கிறார்கள்-நினைவில்
இனிதே வாழ்ந்து வருகிறார்கள் எனது நண்பர்கள்.