அவன் அம்பு

வெறுத்து அரைத்தூக்கத்தில்
இருந்தவர்களை பார்த்து
அவன் கத்திக் கொண்டுயிருந்தான்..

இந்தியாவைப் பற்றியும்
இந்த நூல்களின்
இது தான் சிறப்பம்சம் எனவும்....

யாரும் செவி சாய்த்ததாக
தெரியவில்லை....

அவன் கண்களை பார்த்தேன்..
அக்னி பிளம்பாய்...
தீர்க்கமாய்...

தொண்டை தண்ணீர் வத்த
கத்திக் கொண்டுயிருந்தான்...
காய்ந்த மரமட்டுமல்ல.....
காய்ந்த வயிறும்....

சொல்லடி படும்போல.....

"பிக்காளி இப்போ கூட தூங்க
விடமா பண்ணுறாங்க...".

வசவுச் சொல் நிச்சயம் காதில்
விழுந்து இருக்கும்....

இலக்கை நோக்கி செலுத்தப்பட்ட
அம்பை போல
அவன் போய்க்கொண்டே இருந்தான்...

எழுதியவர் : கவிதை தாகம் (8-Mar-14, 9:01 am)
சேர்த்தது : தசரதன்
Tanglish : avan ambu
பார்வை : 78

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே