பெண்கள் வீழப்பிறந்தோமா இல்லை ஆளப்பிறந்தோமா

தந்தை தன் மகளை
துணிச்சலாக வளர்க்க தான்
ஆசைப்படுகிறார்...

என்ன செய்வது

அம்மாவின்அதட்டலில் அடங்கித்தான்
போகிறோம்..

பள்ளியில் படிக்கும் போது மட்டும்
ஆணும் பெண்ணும் ஒன்றாம்

ஆனால் வெளியில் வரும்போது
பேசிவந்தாலோ தப்பாம்
அண்ணணின் பார்வையில்

என்ன செய்வது
அடங்கித்தான் போகிறோம்...

என்ன படித்து என்ன பயன்
அடுக்கலை தான் உன் ராஜ்ஜியம் என்பது
மாமியாரின் வாதம்
எதுர்த்து கேட்டாலோ
அடங்காப்பிடாரி என்ற பட்டம்

என்ன செய்வது
அடங்கித்தான் போகிறோம்...

இத்தனையும் தாண்டி
வெளியில் வந்து
சாதிக்க வேன்டிய துறைகளில்
சாதித்துக்கொண்டுதான் வருகிறோம்

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (8-Mar-14, 10:47 am)
பார்வை : 175

மேலே