மகளிர் தினம்
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா
இறைவன்
படைப்புகளிலேயே
அவனை விட
அதிகமாக
அன்பும் பாசமும்
பக்தியும்
பெரும்
ஒரே ஜீவன்
மனைவி
தன் இத்தனை வருட
சொந்தங்களை
சற்றே பின்னுக்கு
தள்ளி விட்டு
உன்னை கை பிடித்த
காரணத்தினால்
உன்னையே நம்பி
உன் சொந்தங்களை
தனதாகவும்
ஏற்றுக்கொண்டு
உனக்கு பக்க பலமாக
வாழ்க்கையின்
இறுதி வரைக்கும்
உன்னுடன் இருப்பவள் .
அவளை
மனதார போற்றலாமே.
சகோதரி
தனது தந்தைக்கு
அடுத்த படியாக
தன்னை நிச்சயம்
பாதுகாப்பான் என்று
ஆணித்தரமாக
நம்புகிறவள்,
அவன் தன்னை
விட சிறியவனாக
இருந்தாலும் கூட.
மகள்
விலை மதிக்க
முடியாத சொத்து.
பத்திரமாக
பாதுகாக்க
வேண்டிய
பெட்டகம்
சிறு வயது
முதல் தான்
திளைத்து வந்த
பாசத்தை
தக்க சமயத்தில்
பின்னாளில்
திருப்பித் தருபவள்
தோழி
இது உறவல்ல
நட்பின் புனிதம்
கால நேரமன்றி
எப்பொழுது
வேண்டுமானாலும்
கிடைக்கலாம்,
நாம் வாழும்
நாள் வரை
மற்றவர்கள்
மேலே சொன்னவர்களை விட
நாம் நம் வாழ்க்கையில் தினம்
தினம் பார்க்கும் பெண்மணிகள்,
பெரியவர் முதல் சிறியவர் வரை
ஏராளமானோர் இவ்வுலகில்
இருக்கிறார்கள் .
இவர்கள் அனைவரையும்
நாம் மனதார வாழ்த்துவோம்,
போற்றுவோம் மகளிர் தினத்தில்
மற்றுமின்றி,என்றென்றும்.