இன்று 18ல் சகோதரிகளுக்கு வாழ்த்து
![](https://eluthu.com/images/loading.gif)
மண்ணில் மகளாய் பிறந்து
பெண்ணிற்க்கு புது யுகம்
தந்தவள் நீயோ!
தவழ்ந்த நீ
நடைபோடு...
வீறுகொண்டு
எழுந்து இந்த
விண்ணையும்
வெல்வாயோ!
அன்பு
விளைவது
உண்ணிதான்
என்பது இங்கு
எவருக்கு தெரியும்!
உன்னை உரமாக்கி
ஊனை உயிராக்கி
உயிரை விளைவிக்கும்
உயர்ந்தவள் நீ அல்லவா!
பாசக் கைகொண்டு
நேசமுடன் பழகும்
தோழியானாய்!
உடன் பிறப்புக்கு
விட்டு கொடுத்து-அங்கே
விட்டு பிரியும்
புது சொந்தம் நீயோ!
அடுப்பூதிய
காலத்தினை
எடுத்தூதிய
புதுமைபெண்
நீயோ!
அழகு என்ற
சொல் மங்கை
உனக்காக
படைத்ததோ!
பெண்ணின்
பருவங்களில்
ஏழில் மூன்றை
தொட்டவளோ!
அன்னையாய்
தங்கையாய்
தோழியாய்
இன்னும் எத்தனையோ!
உறவுகளாய் நீ!
அனைத்து சகோதரிகளுக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்
உங்கள் சகோதரன்...
சே.பா