பெண்ணே உன்னால் பிரபஞ்சம் - 8

பெண்ணே உன்னால் பிரபஞ்சம் - 8

காதலித்த போது அவளை
கவிதை என்றேன்.......

கடவுளை உணர்ந்தபோது அவளை
கருணை என்றேன்.....

காலத்தை வென்று நான் சென்ற போது அவளை
கருத்தின் தேடுதல் என்றேன்......!

காற்றாக ஒளியாக மாறிவிட்டேன் - இப்போதும்
காதலால் உன்னால் மலர்கிறேன் என்கிறாள்

பூக்களாய் - பூமியில்
புன்னகையோடு அவள்.......

என்னை முன்னிறுத்தி தன்னை பின்னிறுத்தி
என் வாழ்விலும் சாவிலும் இணை பிரியா....

நீ...................

பெண்ணாக பிறந்திட .....
நான் என்ன தவம் செய்தேன் அம்மா........

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
( 8.3.14 )

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Mar-14, 6:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 74

மேலே