நம் மனங்கள் வளம்பெற வேண்டும்

முகிலாகி குளிராகி
மழையாகி -நம் பூமி
வளம் பெற வேண்டும்!

பூவாகி பிஞ்சாகி
விதையாகி - இம் மண்
பயன் பெற வேண்'டும்!

பயிராகி வளமாகி
செழிப்பாகி - இப் பூமி
கழனி ஆக வேண்டும்!

துளி நீராகி சிற்றாறாகி
பேராறாகி - எம் மண்
உயிர் பெற வேண்டும்!

ஈருயிர் ஓருயிராகி
அன்பாகி - இப்பூமி
புத்துயிர் பெற வேண்டும்!

கனவாகி நினைவாகி
செயலாகி - புது உலகு
காண வேண்டும்!

அறியாமை சிலை ஆகி
அறிவாகி - மனித குலம்
வளம் பெற வேண்டும்!

ஏற்றத் தாழ்வு இலிவாகி
சீராகி - ஓர் குலம்
ஆக வேண்டும்!

நான் நாமாகி உயர்வாகி
ஒன்றாகி - மனிதம்
தழைக்க வேண்டும்!

இலி நிலை சீராகி
உயர்வாகி - என்றும்
ஒரு நிலை ஆக வேண்டும்!

ஏழ்மை நிலை தொலைவாகி
ஒழிவாகி - எம்மோர்
சிறக்க வேண்டும்!

பகைமை நிலை மறைவாகி
ஓரினமாகி - என்றும்
ஒற்றுமையாக வேண்டும்!

அடிமை நிலை மரித்தாகி
காலாவதியாகி - நாம்
சுதந்திரமாய் வாழ வேண்டும்!

எம் மனங்கள் எழிலாகி
வெண்திரையாகி - நாமெல்லாம்
ஒன்றாய் வாழ வேண்டும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (8-Mar-14, 10:01 pm)
பார்வை : 106

மேலே