வயது இது பருவம்வயது

அறிவுரையாவும் மறுக்கப்படும்
ஆசைகள் வெடித்து தளிர்க்கும்
பார்ப்பதெல்லாம் அழகாய்தெரியும்
கண்ணாடியில் தன் நிலைமறக்கும்
காதலெனும் ராகங்கள் இசைக்கும்
சில கணங்களும் யுகங்களாகும்
பிடிவாதம் பிடித்துக்கொள்ளும்
உணர்ச்சிகளிங்கு உஸ்னமாகும்
வார்த்தைகளில் நளினம் பிறக்கும்
இல்லாததை இருப்பதாய் காட்டும்
சிறகுகளின்றி வான்வெளி பறக்கும்
காலைபொழுது தாமதமாய் விடியும்
மாலைநேரங்கள் மயக்கம் தரும்
இரவினில் தவிப்பு அதிகரிக்கும்
விண்மீன்கள்யாவும் கதைகள் பேசும்
அரும்பு மீசையில் ஆசை துளிர்க்கும்
மாராப்பை பலமுறை சரிசெய்யும்
தலைவாரி கைகளால் களைக்கும்
கொலுசு சத்தத்தில் உலகம் மறக்கும்
கனவுகள் வந்து பந்திவிரிக்கும்
கவிதையாவும் முந்திநிற்க்கும்
பருவம் இந்த பதின்ம பருவம்
சிலருக்கு சாதனையாய் அமையும்
பலருக்கு சோதனையாய் முடியும்
பருவத்தோடு நானும் பயணம்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்......