அடடா அநியாயமா செத்துப் போயிட்டோமே-- மணியன்

** மேலோகத்தில் இருவர் உரையாடல் **

மணியன் :- ஏங்க நீங்களும் இப்பத்தான் வர்றீகளா. . ஆமா. . நீங்க எப்படி செத்துப் போனீங்க ?,

மாமணியன் :- அதை ஏன் கேட்குறீங்க. . அதிக குளிர் தாங்காம செத்துப் போயிட்டேன். . . ஆமாம் நீங்க எப்படி செத்தீங்க ?, உங்களைப் பார்த்தால் போலீஸ்காரர் மாதிரி தெரியுதே ?,

மணியன் :- அட ஆமாப்பா. . நான் போலீஸ்காரன்தான். . . அவமானம் தாங்காமல் தூக்கு மாட்டிச் செத்துப் போயிட்டேன். .

மாமணியன் : - என்ன நடந்தது . . ஏன் தூக்கு மாட்டிகிட்டீங்க. . .

மணியன் : - அதை ஏன் கேட்குறீங்க. . .பெண்டாட்டி ஊருக்குப் போயிருந்தாள். . சரக்கு அடிக்கலாம்னு நினைத்து கொஞ்சம் ஓவரா அடிச்சுட்டேன். .

மாமணியன் : - இது எல்லாம் ஒரு தப்பா. . இதுக்காகவா தூக்கு மாட்டினீங்க. . .

மணியன் :- நான் இன்னும் முழுசா சொல்ல வில்லையே. . .போதையில கொஞ்சம் தூங்கிட்டேன்.பாதி ராத்திரியில் ஏதோ சத்தம் கேட்டது. . கண் விழிச்சுப் பார்த்தால் பீரோ திறந்து கிடக்கு. . நகை பணம் எல்லாம் காணோம். . உள் பக்கமா வீடு தாழ்ப்பாள் போட்டது போட்ட படியே இருக்குது.வீடு முழுவதும் தேடினேன்.பொருளையும் காணோம் எடுத்த திருடனையும் காணோம். . போலீஸ்காரன் போதை. . வீட்டில் திருட்டு. . அப்படின்னு பேப்பரில் வந்தால் என் மானம் போய் விடும் என்று எண்ணி தூக்குல தொங்கி உயிர் விட்டேன்.. .

மாமணியன் :- உங்க வீட்டுல சிகப்பு கலர் ஃபிரிட்ஜ் இருக்குதா. . அங்கே தேடிப்பார்த்தீங்களா. . .

மணியன் :- அட ஆமாம். . இருக்குது. . ஆனால் அங்கே நான் திறந்து பார்க்க வில்லையே. .
ஆமா. . ஏன் அப்படிக்லகேட்கிறீங்க. . .

மாமணியன் :- அடப் போங்க சார். . . அந்த ஃபிரிட்ஜிலதான் நகை பணத்தோட பதுங்கி இருந்தேன். நீங்க திறந்து பார்த்திருந்தால் நாம ரெண்டு பேரும் செத்துப் போயிருக்க வேண்டாமே.
என்னய்யா ஆளு நீங்க. . . .


*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (9-Mar-14, 1:52 am)
பார்வை : 240

சிறந்த நகைச்சுவைகள்

மேலே