உண்டு உண்டு மனிதம் தவிர்த்து
சிரித்தால் பறக்கும் நோயுண்டு
சிரிப்பை கொடுக்க வாயுண்டு
பைத்தியம் என நினைக்கும் மனமுண்டு
பைத்தியம் பார்த்து சிரிக்கும் பலருண்டு...!!
அழதால் தீரும் வலியுண்டு
அழுதிட நினைக்கும் மனமுண்டு
அழுதிட வைக்க பலருண்டு
அழுதிடாதிருக்க யாருண்டு...!!
படித்தால் மேதையாக பலருண்டு
படித்திட துடிக்கும் மனமுண்டு
படித்திட வைக்க வாய்ப்புண்டு
படித்துவிட உதவிட யாருண்டு...!!
உணவு இல்லாமல் பலருண்டு
உணவு தந்திட வாய்ப்புண்டு
உணவிட முடியா மனமுண்டு
உணவின்றி வயிற்றில் நோயுண்டு...!!
உண்டு உண்டு உலகம் உண்டு
உலகம் உண்ண வாய்ப்புண்டு
உலகமே உண்டால் இங்கு யாருண்டு
உண்டு நீ பிறரும் உண்டால் உலகம் நிலைக்கும்!!