மங்கையர் தின நல்வாழ்த்துகள்
முற்றுப்புள்ளிகள் நிறைந்த வாழ்வினில்
மகிழ்ச்சியை மட்டும்
முடிவிலியாக மாற்றும் சக்திநீ....
வளிக்குளிர உதவும் தடாகமாய்-உயிர்
வலிக்குளிர ஊறும் அன்பின் பிறப்பிடம்நீ....
நெடுஞ்சாலைப் பயணத்தின் கலைப்பாற்றும்
இளஞ்சோலை வனங்களின் வனப்பும்நீ...
உடன்பாடு காணாத உயிர்கள் இணைய
உடம்படு மெய்யாய் உதிப்பவள் நீ
சவமாய் கிடக்கும் சிவனவன் உயிர்த்திட
உவகை உதிர்த்திடும் அபிநய சக்திநீ...
மாதவர் சமுகம் சார்பாக
மங்கையர் தின நல்வாழ்த்துகள்.....