உலகம் என்பது ஒரு புள்ளிதான்----ஆ

உலகம் என்பது ஒரு புள்ளிதான்----ஆ

வணக்கம் அன்பர்களே.
இந்த உலகம் ஒரு புள்ளியிலிருந்துதான் விரிந்து பரவியுள்ளது என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக ஆராய்வோம்.உலகம் ஒரு புள்ளியிலிருந்துதான் பரவி விரிந்துள்ளது என்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் ஆதாரம் இந்த பறந்து விரிந்து கிடக்கும் உலகம் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் அதுபோல் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் அல்லது ஒரு கண்டத்திற்கும் மற்றொரு கண்டத்திற்கும் இடையே எந்த ஒரு தகவல் பரிமாற்றங்களும் அல்லது தொடர்பு சாதனங்களும் இல்லாமல் ஒன்றையொன்று கண்டறியாமல் தனித்தனியே பிரிந்து கிடந்த அந்தப் பழமையான தொடக்க காலத்தில் நம்மிடையே பழக்க வழக்கங்கள் ஒன்றுக்கொன்று ஒத்து இருந்துள்ளன என்பதே ஆதாரம் அன்றி வேறொன்றுமில்லை.

மண வாழ்க்கை,குடும்ப அமைப்பு,சமூகப் பிணைப்பு,உணவுப் பழக்க வழக்கங்கள்,ஆடை உடை நாகரிகங்கள்,கட்டிடம் கட்டும் அறிவு,துணி நெய்யும் அறிவு,விவசாய அறிவு சொந்த பந்த உறவுமுறை அறிவு போன்ற பொதுவான அடிப்படை அறிவுகளை மனிதன் ஒரு இடத்தில் கூடி வாழ்ந்திருக்கும் போதுதானே கற்றிருக்க வேண்டும்.அப்புறம் பரவி வாழ பிரிந்து செல்லும்போது இவ்வறிவுகளையும் அவன் தன்னோடு எடுத்துச்சென்றிருக்க வேண்டும்.என்பதுதானே சரியாகும்.

அதன் பின்பு அவன் பிரிந்து சென்று வாழ்ந்த இடத்தில்.அவனுக்குள் சில புதிய நாகரிக மாற்றங்கள் தோன்றியிருக்கலாம்.மொழிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.சமூக அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் தொழில் முறையில் புதிய உத்திகள் மற்றும் அவன் உடல் அமைப்பு,போன்றவைகள் அந்த அந்த இடங்களின் பூகோள அமைப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றிருக்கலாம்.ஆனால் அனைத்துவிதமான மாற்றங்களுக்கும் அடிப்படை அறிவு என்பவற்றை அவன் எங்கோ ஒரு புள்ளியில்தானே கற்றிருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அறிவியல் சாதனங்கள் கண்டு அறியப்படாத காலத்திலேயே மனிதன் கோள்கள் பற்றி அறிந்து அவைகளுக்குப் பெயர்களும் சூட்டியிருக்கிறான்.பூமி தன்னைத்தானே ஒருமுறை சுழற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கணக்கிட்டு அதற்கு ஒரு நாளெனவும்.சந்திரன் பூமியை சுற்றி வருகிறது எனவும் அது ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை நட்சத்திரங்கள் எனும் மைல் கற்களாகப் பிரித்தும் அதன் பயணக்காலம் ஒரு மாதம் எனவும்.அதன் பகுதிகள் நான்கு வாரங்கள் எனவும்.மற்றும் பன்னிரண்டு தொகுதிகள் ஒரு வருடம் எனவும் அல்லது முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் எனவும் அது பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு எனவும் உலகம் முழுவதும் ஒரே விதமாக ஒத்துக்கொண்டது எப்படி?.அதாவது தகவல் மற்றும் தூரப்பயணமாகிய ஆகாயமார்க்கம்,தரைவழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அந்த தொடக்க காலத்தில் இந்த பரந்துவிரிந்த உலகத்தில் இந்த நிகழ்வு ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் என்று நாம் வியக்கும்போதுதான் நாம் ஒரு புள்ளியில், ஒரு தாயில், ஒரு உறவில், ஒரு சொந்தத்தில், ஒரு குடும்பத்தில், ஒரு ஊரில் பிறந்து வாழ்ந்துதான் பின்பு உடமைச்சண்டை,போர்,மற்றும் யுத்தங்களால் இடம் பெயரவேண்டிய கட்டாய சூழலிலால் உந்தப்பட்டு இந்த பரந்துவிரிந்த உலகப் பரப்பில் பரந்து வாழ போக்குவரத்து சாதனங்களையும் கண்டறிந்து பிரிந்து சிதறியிருக்கிறோம் என்பதுதான் உண்மையிலும் உண்மை.

நமக்குள் உடமை உரிமைகள் அல்லது ஆசை அல்லது தேடல் என்ற ஒரு அறிவு எட்டும் வரை நாம் ஒன்றுகூடி ஒற்றுமையாக ஒரு புள்ளியில்தான் வாழ்ந்திருக்கிறோம்.எப்போது விவசாயம் என்ற ஒரு அறிவைப்பெற்று அதற்கான நில உரிமை உடமைகளை பெருக்கிக்கொள்ள தேட முயன்றோமோ அப்போதே நமக்குள் போட்டி பொறாமை மற்றும் மற்றவரை அடக்கி ஆளும் ஆளுமை மேலும் தலைமை முனைவு போன்ற சமூக மாற்றங்கள் அல்லது நெருக்கடிகாளால் நமக்குள் ஒற்றுமைக்குலைவு ஏற்படவேண்டிய நிர்பந்தம் கட்டாயமானது.

அதாவது நமக்குள்ளிருந்த அன்பு சுருங்கி ஆசை விரியத் தொடங்கிய போது இந்த உலகமும் விரியத் தொடங்கியது.மனித இனம் சிதறி வாழ வேண்டிய அவசியம் ஏற்படும் போதுதான் நமக்குள் சமூக அமைப்பு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அப்போதுதான் குழுக்கள் மற்றும் தொழில் முறைகளால் மொழி,இனம்,சாதி,மதம் போன்ற பிரிவினை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.ஆகவே நமக்குள் நிகழ்ந்த சமூக மாற்றங்களுக்கு அடிப்படைக்காரணம் ஆசைதான் என்றால் அது மிகையாயாகாது,

தொடரும்.//////////கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (9-Mar-14, 10:13 am)
பார்வை : 299

மேலே