எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது

எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்.

"கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று"!

கிடந்து உண்ணார் = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது

நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது

வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது

சிறந்து மிக உண்ணார் = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது

கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது

இறந்து = நேரம் காலம் பார்க்காமல்

ஒன்றும் தின்னற்க, நின்று! = நின்றுகொண்டு ஒன்றும் சாப்பிடக் கூடாது

அதாவது ..

உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்து உணவு உண்ண வேண்டும்.

எழுதியவர் : (9-Mar-14, 10:04 am)
பார்வை : 106

மேலே