அப்புவின் சந்தேகம் தொடர்கிறது 2
அப்புவின் சந்தேகம் தொடர்கிறது ... 2
அம்மா
என்னடா
எனக்கு ஒரு சந்தேகம்
உனக்குத் தான் தினமும் ஏதாவது சந்தேகம் வருமே ! என்ன சந்தேகம் இன்னிக்கு ?
அம்மா .. நீ வானவில்லை பாத்திருக்கயா"?
ஓ பார்த்திருக்கேனே
வானவில்லு எப்படி அம்மா வருது
அதுவா .. உனக்கு சொன்னா புரியுமாடா
புரியும் படியா சொல்லு அம்மா
சரி .. நம்ம தலைக்கு மேல என்ன இருக்கு
ஃபேன்
அட முட்டாப்பய மொவனே. நான் அதைக் கேக்கல்லே. நாம வெளியில போயி நின்னு ஆகாசத்தைப் பாத்தா தலைக்கு மேல என்ன இருக்கும்
பகல் நேரத்திலா ராத்திரியிலா .. அம்மா
என் செல்லம் .. ராத்திரி இல்ல .. பகல் நேரத்தில
சூரியன்
ம். சமத்து. சூரிய ஒளிக்கதிர்கள் வானத்தில் இருக்கும்
நீர்த்திவலைகளை ஊடுருவிச் செல்லும் போது வானவில் தோன்றும்.
வானவில்லில் எத்தனை நிறங்கள் இருக்கு அம்மா
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா இந்த ஏழு வண்ணங்கள் இருக்கும்.
பச்சோந்தியை பாத்திருக்கைய அம்மா
இது என்னடா புதுக் கேள்வி
சொல்லம்மா .. பாத்திருக்கயா
ஓ .. பாத்திருக்கேனே
பச்சோந்தி எது மேல இருந்தாலும் அதன் நிறத்தில் தன்னை மாத்திக்கும்ன்னு சொன்னங்கம்மா
யாரு சொன்னா
எங்க டீச்சர்
ஆமாம் மாத்திக்கும். அதுக்கு என்ன இப்போ
பச்சோந்தி வானவில்லு மேல நின்னா என்ன நிறமா இருக்கும் அம்மா ..