எப்படி சொல்வேனடா - குமரி பையன்

இதமான இரவில்
இதழோர உறவில்
இன்பங்கள் என்னை அழைக்கின்றதே...

விழிதீண்டல் கண்டு
வலிசீண்டல் கொண்டு
விரகத்தில் மனம்தான் மூழ்கின்றதே...

நதியோடு நின்றால்
நலமாகு மென்று
நானோடி அருகில் நனைக்கின்றதே....

என்னெரிகின்ற தேகம்
எடுக்கின்ற வேகம்
என்றாலும் என்மேனி கொதிக்கின்றதே..

குறுகுறுத்த பார்வை
குறும்பான பாவை
சுதிபோட்டு முன்னில் குதிக்கின்றதே..

தலையணைகள் அமுங்க
தன்னிளமுடிச்சு அவிழ
தரங்கங்கள் இணைந்து அணைக்கின்றதே...

நான்கொண்ட தாகம்
நீதந்த மோகம்
நீர்குடித்தும் ஏனோ தவிக்கின்றதே...

சுடுசொல்லை கொண்டு
நெடும் பாக்களெல்லாம்
வடித்தேனே செவியில் இனிக்கின்றதே...

உனைதொட்ட நேரம்
வினைபோன தூரம்
உயிரோடு இணைந்து துடிக்கின்றதே...

கற்பனைகள் விற்றேன்
கனவுகளை வென்றேன்..
நிஜமானே பெண்ணே நீ வாழ்கவே..!

எழுதியவர் : குமரி பையன் (9-Mar-14, 4:35 pm)
பார்வை : 343

மேலே