தேரேறி என்று வருவானோ
![](https://eluthu.com/images/loading.gif)
என்று வருவானோ?
வாழ்க்கையெனும்
தேர் கப்பலேறி மணவாளனாக ....
சனி பெயர்ச்சி போனது
குரு பெயர்ச்சியும் போனது
ராகு கேதுவும் நீந்தி நீந்தியே ....
தமிழ் புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு
இதழ்களெல்லாம் பறந்து போனது
மாத ராசி வார ரசி பலனெல்லாம்...
பார்த்தும் பழைய இதழ்களோடு
நட்சத்திரம் பிறந்த தேதி நேரம் காலம்
பார்த்தும் பலனில்லை நல்ல
வரன் வருவானென்று
என் சொப்பனதொடு ....
நம்பிக்கை இழந்த போது
என் கண்ணில் பட்டது பகவத் கீதை
''எது நடந்ததோ அது
நன்றாகவே நடக்கிறது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் ''
இன்றும் என் காதுகளில் ...!