ஒரு பார்வை மட்டும்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்

பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

எழுதியவர் : சுசிலா (10-Mar-14, 9:19 am)
Tanglish : oru parvai mattum
பார்வை : 166

மேலே