அடேய் குடிகாரனே
வியர்வைச் சிந்தி
உழைத்து வருவான் சிலநூறு
அலுப்பு போக
குடிக்கப் போவான் ஒரு"நூறு"!
போதை கொஞ்சம்
ஏறும் போது புத்திமாறும் !
நேர் பாதையிலே
நடக்கும் போதே தடுமாறும் !
தினம் குடிக்க
அவன் குடும்பம் தள்ளாடும் !
சண்டை கூச்சல்
தினம் நடக்கும் வீட்டோடும் !
பெருகிப் போகும்
குடித்த கடன் தொல்லைகள்
கருகிப் போகும்
கல்விப் பயிலும் பிள்ளைகள் !
பெற்ற பிள்ளை
நற்பெயரும் கெட்டுப் போகும்
கட்டியவள்
கற்பும் கூட களங்கமாகும் !
உழைத்த காசு
மதுவாலே அழிந்துப் போகும்
உழைத்த உடல்
நோயாலே வீழ்ந்துச் சாகும் !
போதையாலே
பாடை ஏறும் வாழ்கை ஏனடா ?
புரிந்துக் கொண்டால்
சிறக்கும் உந்தன் வாழ்வு தானடா !