நிகர் உண்டோ பெண்களுக்கு
நிகர் உண்டோ பெண்களுக்கு என்றலோ,
வாய் திறந்தே செப்பவிடிலும் தெரியுமே:
அகிலத்திற்கு செப்பிடவும் தேவையோ?
தரணீயிலே பல பணி அன்று !
விண்ணிலும் சிறப்போம் இன்று !
அடுப்படியில் அரசாட்சி அன்று !
அகிலத்தை அரசல்வோம் இன்று!
மாபெரும் சபையிளும் மாண்பு
நிறை பெற்றே நிற்கும்; இப்
பெண்டீர் தமக்கு நிகருண்டோ?
நுண்மாண் நுழைபுலம் நிறை
மாதர் தமக்கு நிகருண்டோ ?
அக, புற அழுக்கு நீக்கி
குருவுக்கு முன் தானே
விதைவிதைக்கும் தாயிக்கு நீகருண்டோ ?
விண்யானம், மெய்யானம் நுழை வாயிலாகி
அகம்தனை அருமையாய் உணர்த்திடும்
அன்னையர்க்கு தான் நிகர் உண்டோ?
கூர்தலறம் அறி பெண்டீற்கு
பார்தனில் என்றுமே நீகருண்டோ ?
பெண்கள் இன்றி ஊனுடல்
பெற இயலா காண்;
பெண்ணிற்கு தானிங்கு நிகர் உண்டோ?