இரவுக் காடு

இரவானதும்
கவ்விக் கொண்டு
திரியும்
பூனையின் வாயில்
இனம் புரியாத
தேகம் நடுங்குகிறது.....

---------------------------------------

நீண்ட இரவுகளில்
நிலவைத் தேடி
தவிக்கிறாள் ...
ஜன்னல் திறந்த
வீட்டுக்காரி....

------------------------------------------

ஒவ்வொரு
இரவும்
வெவ்வேறு
இரவே .....
------------------------------------------

இரவின் தூண்டிலில்
சிறு வெளிச்சமும்
மீன்களே.....


-----------------------------------------

நதியில்
துடுப்பு போடுவது
போல...
இரவில்
உன் கண் சிமிட்டல்....

-------------------------------------------

எழுதியவர் : கவிஜி (11-Mar-14, 10:04 am)
Tanglish : iravuk kaadu
பார்வை : 147

மேலே