valikal
வீசி எறிந்தனர் கறிவேப்பிலையாய்...
வாடிப்போனேன் வதங்கிய இலையாய்..
சாட்சிகள் சொல்லவே யாரும் இல்லை...
சங்கடம் உற்றேன் சன்னிதி அடைந்தேன்...
தோற்றது கூட வருத்கங்கள் இல்லை-இவன்
ஏற்றது இல்லை என்றதே வலிகள்...
வீசிவிட்டோமென எக்காளம் வேண்டா..!!
விதையாய் தானிங்கு விழுந்துள்ளேன்..
மறுமுறை எழுந்திடுவேன்!!
மரமாய் வளர்திடுவேன்!!
எதிரியும் வந்திடுவார்!!
எந்தன் நிழல்களை வேண்டி நின்று!!!!
-ம.பிரவீன்குமார்