பெண் -பாகம் -2
பள்ளிக்காலம் அது பசுமை நிறைந்த காலம் ,கனவுகள் நினைவான காலம் ,பள்ளிக்காலத்தில் நிலா மிகவும் அழகு .அதனாலோ என்னவோ தெரியவில்லை அவளின் தோழிகள் ஒவ்வொருவரும் அவளுடன் நட்பு கொள்ள சண்டையிட்டு கொள்வார்கள் .நிலாவிற்கு அனைத்து தோழிகளையும் பிடிக்கும்.அவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு அவள் மிகவும் உதவினால் .நிலா பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒருவன் அவளை காதலித்தான் ,ஆனால் அவள் அதை கண்டு கொள்ளவில்லை .அதன் பிறகு ஒரு நாள் நிலவின் தோழி ஒருத்தியின் அத்தை மகன் நிலாவை காதலிப்பதாக அந்த தெரு முழுவதும் சொல்லிக்கொண்டிருந்தான் .அன்று நிலாவின் பிறந்தநாள் நிலாவின் வீட்டில் இது தெரிய வர பெரிய பூகம்பமே நடந்து விட்டது நிலா எவ்வளவு சொல்லியும் அவளுடைய அம்மா கேட்கவே இல்லை அவள் வீட்டுக்கருகில் இருந்த ஒரு பாட்டிக்கு இவள் செல்லம் என்பதால் அந்த பாட்டி அவனை அடித்து உண்மையை அனைவர்க்கும் உணர்த்தியதோடு அவன் வீட்டில் அவனுடைய அம்மாவிடமும் சொல்லிவிட்டு வந்துவிட்டது .நிலாவை பற்றி அனைவரும் புரிந்து கொண்டனர் .