விதியின் விளையாட்டு8

மதனின் பேச்சுக்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக நடந்தாள் ரிஷானி!

மதன் அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.........

அதன் பிறகு மதன் எவ்வளவோ பேச முயற்சித்தும் ரிஷானி கண்டுக்கவில்லை.

ஆனால் ரிஷானி எப்பொழுது கவலையுடன் காணப்பட்டாள் இது ஷிவானிக்கு சற்று வேதனையை உண்டுபண்ணியது என்ன கேட்கலாமா ? என்று ரிஷானியிடம் சென்றால் எந்த இடமும் கொடுக்காமல் நீங்கி விடுவாள்!!!!!!!

அக்கா அடிக்கடி எதோ பேசவந்து முடியாமல் திரும்பி போறதை ரிஷானியும் அறியாமல் இல்லை.

நாட்கள் சென்று கொண்டிருந்தன இன்னும் சிறிதுநாட்களில் பரீட்சை ஆரம்பமாகும் கட்டத்தில் இருந்தது ,,,,,,,

பொறுமைகாத்த மதன்;

ஒருநாள் மதன் ரிஷானியை வலுக்கட்டாயமாக அழைத்தான் வேறு வழியில்லாமல் ரிஷானியும் அவனிடம் பேசினாள்.

முதலில் மதன் ரிஷானியிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டான்..........
அவள் எதுவும் பேசாமல் கண்கள் தரையை பார்க்க நின்று கொண்டிருந்தாள்!!!


மதன் பேச ஆரம்பித்தான் 10 நிமிடங்கள் அவனின் பேச்சு தொடர்ந்தது........

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ரிஷானி பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து வகுப்பிற்கு சென்று விட்டாள்????????

பேராசிரியர் மனோஜ் ரிஷானியை பக்கத்தில் இருக்கும் காபி ஷாப் க்கு வர சொல்லுமாறு அவர்கள் வகுப்பில் உள்ள ஒரு பையனிடம் அழைப்புவிடுத்தார்.........

அவர் இப்போது எதற்கு என்னை அழைக்கிறார் என்று எண்ணற்ற கேள்விகளுடன் மனப்போராட்டத்தில் அவரை பார்க்க சென்றார்!!!

அவளைப்பார்த்ததும் சிரித்த முகத்தில் "வா ரிஷானி உட்கார்" என்ன ஆளையே காணோம் ஒரு நாள் பேசினதோட சரி அப்புறம் நிறைய டைம் நான் உன்ன பார்த்தேன் பேசலாம்னு வருவேன் நீ தான் கண்டுக்காமல் சென்று விடுவா??????என்று சற்று வருத்தம் கலந்த முகத்தில் சொன்னார்.

அது......அது வந்து சார் என்று இழுத்தாள்..........

ஹலோ! இப்போ நான் சாரா வரல உங்க பேமிலி ப்ரண்டா வந்திருக்கேன்மா தயங்காம பேசு ஓகே என்றவர் தன் கையிலிருந்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் நீட்டினார் இதை உன் அப்பாவிடம் கொடுத்திரு என்றார்.

அதை வாங்கி தன் புத்தகத்தில் வைத்துக்கொண்டாள் ரிஷானி!!!!!!!

உன் அப்பா ஏதாவது விஷயம் சொன்னாரா???என்று கேட்டார் அவர்.

இல்லை சார் எதுவும் சொல்லவில்லை என்ன என்று கேட்டாள்.

அதற்கு அவர் புன்னகையை மட்டும் பதிலளித்தார்..........

இவள் எதுவும் புரியாமல் விளித்துக்கொண்டிருந்தாள்?????

வீட்டுக்கு போனதும் உனக்கே புரியும் நான் கிளம்புறேன்மா நாளைக்கு பார்க்கலாம் என்று கண்ணால் சிரித்துவிட்டு சென்றார்...........

மதனின் நினைவுகளுடனும் இவனின் நினைவுகளுடனும் இருந்தவள் எவ்வளவு நேரம் அங்கிருந்தாளோ? அவளுக்கே தெரியவில்லை மணி 5 அடித்ததும் சுயநினைவுக்கு வந்தவள் அங்கிருந்து கிளம்பினாள்,,,,,,,,

வீட்டில் இவள் காலடி எடுத்து வைத்ததும் அப்பாவின் குரல் கேட்டது!!!!!
அவரின் வார்த்தைகளை கேட்டதும் ரிஷானிக்கு தூக்கி வாரிப்போட்டது!

அப்போ இந்த விஷயமாகத்தான் மனோஜ் என்னை அழைத்து பேசினானா?????????? என்று நினைத்தவாறே உள்ளே சென்றாள்.





விதி தொடரும்............

எழுதியவர் : ப்ரியா (11-Mar-14, 12:52 pm)
பார்வை : 362

மேலே