மாலை போழுதில்
பஞ்சு மெத்தையொன்றை பால் வெளியில்
விரிப்போம்.
முழுமதியய் அருகே வெளிச்சத்திற்கு
அமர்த்துவோம்
சில்லென்ற காற்று மேனியய் தழுவ
கேட்போம்.
அருகே நீ வேண்டும் !
நம் நெருக்கம் கண்டு,
சிதறிகிடக்கும் நட்சத்திரம் சற்றே சிவக்க
வேண்டும்.
ராசாவின் கானம் காதுகள் நிறைக்க.
கரங்களை பிடித்தபடி கரைப்போம்
ஒவ்வொறு மாலை போழுதும்...