​நிந்திக்க வைக்காதீர் எங்களை

முன்னேறத் துடிக்கும் பெண்களே
முன்னரே வந்திங்கே நிற்பதேன் !
சமஉரிமை தேவையென போராடும்
சமகால பெண்களே இதுசரிதானா !

விண்ணில் கால்பதித்த கல்பனா
விண்ணளவு சாதித்தார் அல்லவா !
​தொழுதிடும் அன்னை தெரசாவும் ​​
தொட்டாரே அகிலத்து நெஞ்சங்களை !

வேங்கையாய் வாழ்ந்த பெண்களும்
மாணிக்கங்கள் அல்லவா மண்ணிலே !
வேடிக்கை இல்லை இது வேதனையே
வாடிக்கையாளரா நீங்களும் இங்கே !

அகமதில் ஆசையோ அளவிலமால்
முகமதை மறைப்பதும் ஏன்தானோ !
சாதனை புரிவது சாராயகடையிலா
சாக்கடையில் விழும் பெண்குலமே !

நாட்டை ஆண்டிட துடிக்கும் காலமிது
நாசமே அடைய குடிக்கும் காட்சியிது!
சிந்திப்பீர் சிறிதேனும் நீங்களும் இனி
நிந்திக்க வைக்காதீர் எங்களை இனி !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Mar-14, 9:22 am)
பார்வை : 393

மேலே