+பார்வை ஒரு மிட்டாய்+
பேருந்து நிறுத்தத்தில்
நானிருந்தேன் வருத்தத்தில்
வேகம் வீசிய காற்றும் மென்மையானது
சந் தேகம் கொண்டு பார்த்திட
காரணம் உன் பெண்மையானது
வந்து நின்றிட பக்கத்தில்
நான் இருக்கின்றோனோ சொர்க்கத்தில்
பார்வை ஒரு மிட்டாய்
பக்கம் வந்து நீ தொட்டாய்
என் மனசு பறந்தது சிட்டாய்
உன் முகமும் ஜொலிக்குது பட்டாய்
நினைத்திருந்தேன் நீ எனக் கெட்டாய்
உன் காதல் கிடைத்தது லட்டாய்
அடிக்கடி என் பெயர் கூப் பிட்டாய்
முழுதாக எனை கவர்ந் திட்டாய்
எனக்காக பல பேருந்தை விட்டாய்
ஏறிய பின் நானும் தூங்கிடவே நீயும் விட்டாய் கொட்டாய்