சாலையோர சங்கீதங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
சாலையோர சங்கீதமாம் ...
அன்னை
தந்தை
கிடையாது,
அண்ணன்
தங்கை
கிடையாது,
ஆனால்
அனைவரையும்
உறவு சொல்லி அழைத்து
அவல குரல்
எழுப்புகிறது
அம்மா அய்யா
பசிக்கிறது
பிச்சை போடுங்கள்
என்று,
சாலை ஓரம்
சமிக்கை
விளக்கு
சிவப்பு வர்ணம்
ஒளிரும் நேரம்
இரு சக்கர வாகனமோ
நான்கு சக்கர வாகனமோ
நிற்கும் வேளையில்
பிச்சை எடுக்கும்
கொடுமையை
என்ன சொல்ல ,
கையில் பாட புத்தகம்
தூக்கும் வயதில்
கஞ்சி கோப்பைகளை
ஏந்தி செல்லும்
சிறார்களை பாருங்கள்,
எதிர்காலம்
என்ன வென்று
தெரியாது
நிகழ்காலம்
எப்போதும்
புரியாது
நடந்ததை
நினைத்து
வெந்த இரணங்களாக
இவர்களின் மனம்
பசியால் வயிறு
ரீங்கார ஓசை
எழுப்புகிறது
பசியால்
காது
அடைத்து போகும்
தேகம்
மரத்து
போகும்
கண்கள்
வெளிர்த்து
போகும்
நாவு
உலர்ந்து
போகும்
நடை
தளர்ந்து
போகும்
இது தொடர்ந்து
போனால்
உயிர் மரித்துப்
போகும் நிலை
அவர்களின் வாழ்க்கை...