விழிப்பு

விழிப்பு ! 12.5.1999

தலையணை
நனைந்து வியர்வையால்
கன்னம் உப்பு நாற்றம் !
வெளியில் மழை
பெய்து கொண்டிருந்தது !

ஜன்னல் வழியே
நிலவின் வெளிச்சம்
அறை முழுதும் !

காற்றாடி சப்தம்
கடிகாரத்தின் முட்களோடு
நிசப்தமான இரவை
நொடிகளாய் சலனப்படித்தியது !

ஈரமான காற்று
சில்லென்று
போர்வைக்குள் ஆழமாக
புகுந்தேன் !

கனவுகள்
கலைந்த நடு இரவு
விழிப்பு
அத்துணை சுகமாய்
அமையவில்லை

இமைகள் மூடி
முயற்ச்சித்தாலும்
மீண்டும் ஒரு நாள்
சீக்கிரமாய் விழித்துக்கொண்டது
புதிய போராட்டன்களோடு !

எழுதியவர் : கர்ச்சாகின் (12-Mar-14, 12:09 pm)
Tanglish : vilippu
பார்வை : 100

மேலே