சொந்தம்
யாருக்கு என்னடா சொந்தம்
எல்லாம் இடைப்பட்ட காலத்து பந்தம்
ஊருக்கு ஓரமா கட்டுக்குள்ளே - இது
போட்டு உடைக்கிற பண்டம்
மண்ணோடு மண்ணான
மன்னாதி மன்னர்கள் கோடி - நீ
பொன்னை பொருளை அள்ளி கொடுத்தால்
எமன் வாராமல் போவானோ தேடி
அஞ்சுக்கும் பத்துக்கும் அலைமோதும் கட்டத்தில்
அண்ணனும் தம்பியும் ஏது
உடல் கட்டு தளர்ந்து கட்டிலில் சாய்ந்தால் -உன்
காதலி விடுவாளோ தூது
சாவு நோவு பிரிவு - வந்து
சுற்றி வளைக்குது சோகம் - இதில்
நூறு ஆண்டு வாழ்வு
வாழ்ந்து என்னடா லாபம்
இன்று இருப்பார் நாளை இல்லை - இது
இயற்கை ஓதும் வேதம்
புத்தன் இயேசு வந்து பிறந்தும் - நீ
படிக்கலியே பாடம் - யாருக்கு என்னடா சொந்தம் ...
கவிஞர் நரியனுர் ரங்கு
செல் : 9442090468
ஈமெயில் : நரியனுர்ரங்கு@ஜிமெயில்.காம்