இருந்துவிடேன்

நீ
என்னுள் வந்த பாதை
எனக்குத்தெரியாது !
ஆனால் ...
இருக்குமிடமோ என் இதயம் !
அதனால் தானோ!
என்னை...
பாண்டியர் காலத்து கோவில்களை
பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்?...
நீ
என்கூடவே இருந்தால்
நான்
சோழர்கால சுவடிகளாய் மாறுவதில்
ஆச்சரியமில்லை !
இருந்துவிடேன்... என்கூடவே ...

எழுதியவர் : TP Thanesh (13-Mar-14, 12:45 am)
பார்வை : 47

மேலே