ஆரம்ப பாட சாலை
அறிவைப் புகட்டி
ஆற்றலைப் பெருக்கி
இனிமையாய் போதித்து
ஈடேற்றி என்னை
உன்னாலும் முடியுமென
ஊக்கத்தைக் கொடுத்து
ஐயத்தைப் போக்கி
ஒழுக்கத்தை உணர்த்தி
ஓயாத உழைப்பிற்கு
ஔவை ஆத்திச்சூடியை-எனக்கு
அடிப்படைக் கல்வியாய் தந்தது -இந்த
ஆரம்பப் பாட சாலை!