தமிழ் காதலி

சித்திரை வெயிலை,
கோபங்களில் சுமக்கும்,
என் வைகாசி நிலவே...
ஆனியாய் உன் முகம்,
என்னுள் ஆழப் பதிந்ததனால்,
ஆடிப்பெருங்காற்றுக்கும்,
அசையாத என் மனம்,
உன் (தா)ஆவணிக்குள் சாய்ந்ததடி...
புரட்டாசி மாத முதல் மழையாகவும்,
ஐப்பசி மாத அடை மழையாகவும்,
என் உயிருக்குள் நீ,
சாரல் மழை தூவுகிறாய்....
கார்த்திகை திருவிளக்கை போல்,
என் இதயத்தில் உன்னை,
தீபமேற்றியிருகிறேன்...
மார்கழி மாத பனி இரவுகளில்,
தனிமையின் வெப்பத்தால்,
தவிக்கிறாயா..?
கலங்காதே...
தைத் திருநாள் தொடங்கட்டும்..
உன் பெற்றோரை சந்தித்து,
மாசியில் முகூர்த்தம் குறிக்கிறேன்..
என் வாழ்கையின் மோட்சமான உன்னை,
பங்குனியில் கைபிடிக்கிறேன்...
அதுவரை கொஞ்சம் காத்திரடி..
என் தமிழ் காதலியே ...