ஏன் என்னை விட்டுச்செல்கிறாய்

உடையவும் வழியின்றி,
கரையவும் விதியின்றி,
கடல் ஒதுக்கிய நுரையாய்,
கரையில் கிடக்கிறேன்...

நீயோ,
அலையாய் வந்து,
அடிக்கடி தொட்டுச்செல்கிறாய்...
ஆனாலும் ஏன்,
என்னை,
கரையிலேயே விட்டுச் செல்கிறாய்....?

எழுதியவர் : புவி (14-Mar-14, 11:29 am)
பார்வை : 490

மேலே