ஈழ தமிழன்தலைவன் பிரபாகரன்

பிரபாகரன் அவர்களை பற்றி தெரியாதவன் தமிழனே இல்லை....
என் தலைவனின் தனி பெருமையை , தனி திறமையை என் தமிழகமே சொல்லும் என் ஈழ தமிழகமே சொல்லும்....
தன்னை பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு தான் குடிப் போகும் புது இல்லத்திற்கு "அன்னையர் இல்லம்" என்று பெயர் வைக்கும் மூடர்கள் வாழும்,கோமாளிகள் வாழும் இந்த தமிழ் நாட்டில் பிறந்ததற்காக பெருமை கொள்ளவில்லை ,,
நான் தமிழ் பேசுகிறேன் நான் தமிழ் நாட்டில் வாழ்கிறேன் அதனால் பெருமை பட்டு கொள்ளவில்லை....
மாறாக ,,,,என் தலைவன் ஒரு தமிழன்,,,அந்த தமிழன் ஒரு ஈழ தமிழன் ,,,,திரு.பிரபாகரன் பிறந்த இந்த தமிழ் வம்சத்தில் தான் பிறந்திருக்கிறேன் என்பதால் தான் நெஞ்சு தட்டி தோள் தூக்கி பெருமை கொள்கிறேன்....
என் தலைவன் மடிந்திருக்கலாம் ...,,,மாய்ந்திருக்கலாம் ...ஆனால் மாயவில்லை எங்கள் மனதில்.....
என் தலைவன் ஈன்ற பிஞ்சை நசுக்க முடியாமல் சுட்டு பொசுக்கி விட்டார்கள் அந்த இளம் பிஞ்சை...
ஒரு வேளை என் தலைவன் உயிரோடு இருக்கும் போது தான் ஈன்ற பிஞ்சு உயிர் விட்ட செய்தியை கேட்டிருந்தால் நிச்சயம் ஆனந்த வெள்ளத்தில் குளித்திருப்பார் ..காரணம் தான் ஈன்ற கன்று தன் ஈழ தமிழகத்துக்காக உயிர் விட்ட செய்தியை எண்ணி எண்ணி பெருமைப்பட்டிருப்பார் ,,,
ஒரு வேளை என் தலைவன் உயிருடன் இருந்திருந்தால் இந்த செய்தியை உங்களிடம் சொல்ல கடமை பட்டிருப்பார் ....அதில் சில உங்களுக்காக...
கலங்கிய உள்ளதை
கருபிண்டமாக்க நினைத்த கணத்தில்
கண் தான் கலங்கியதோ? கருது அல்லவோ???
அறிய விழைந்த நானோ
உரு கொண்ட உடலை கருக்கி தான் காண்பிப்பேனோ?
கருகிய நானோ கடவுள் !!!!!
கண்ட நீயோ யார்?
உடல் தான் உருவமென்று நினைத்தாய் நீ
உண்மை தான் உறவென்று நினைத்தேன் நான் !!!!
பரிமாறிக்கொண்டேன் என் உண்மையை
உன் உண்மையின் உறவுக்கு ,,,,,,
நிகராகவில்லையோ?
என் உண்மை, உன் உண்மைக்கு .....
என் உயிரின் இடைவேளை ...
எமனின் உயிர் வேட்டை
அதனாலென்னவோ ?
உடல் கருகியதும் உயிர் போனதே
என் உண்மையே...
உண்மை என்றும் உயிர் தான் என்று
நீ சூதாட கண்ட நான் ...
உண்மை என்றும் உறவு தான் என்று நான் வாதாட விழிதாயே சொப்பனத்தில்....
இறுதியில் ஒப்பு கொண்டாயே உண்மையில்...
என் உண்மையை...
இக்கணம் நீயும் உண்மை தான் என் நிழலே,,,,,,

இங்கணம் ,
மற்றுமொருமுறை நான் என் தலைவனை பார்க்க போவதில்லை...அனால் என் தலைவனின் சாயல் குணத்தோடு ஒருவன் வருவான என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் ஒரு
---------------------------தமிழச்சி--------------------------------

எழுதியவர் : சுபாகலை (14-Mar-14, 7:37 pm)
பார்வை : 170

மேலே