என்னால் முடிந்திருந்தால்
என்னால் முடிந்திருந்தால்...
வருண பகவானையும் அழைத்து வந்திருப்பேன்
உன்னை பார்க்க வரும்போது..
உலகின் அத்தனை பூக்களையும் ஒன்றாய் பூக்கவைத்து
உன் மீது கொட்டியிருப்பேன்...
வானவில்லையும் வண்ணத்து பூச்சிகளையும்
உன்னையே சுற்ற விட்டிருப்பேன்..
ஆதவனின் ஆதிக்கத்தை ஒரு நாளேனும் நிறுத்திவைப்பேன்..
நிலவையும் நட்சத்திரங்களும் தோரணங்களாக்கி தொங்க விட்டிருப்பேன்
கடல் அன்னையின் அனுமதி பெற்று அவளின்
அதிசயங்களை காண செய்திருப்பேன்..
தமிழ் அன்னையின் ஆசி பெற்று உனக்கேனும் ஒரு காவியம் இயற்றி வைப்பேன்...
' காதல் காவியம்'
--- ராஜு