இறைவா உனக்கு இத்தனை பசியா

காலை நேரம் பகலவன் ஒளியில்
வானில் தோன்றும் மின்மினி யாவும்
மறைவதைக் கண்டோம் ஒவ்வொரு நாளும்
மாலை நேரம் மறைந்தால் கதிரவன்
கண்ணில் தெரியும் மின்மினிக் கூட்டம்
பகலும் இரவும் பயணம் தொடங்கி
வானில் பறக்கும் விமானம் எல்லாம்
இறங்கிடக் கண்டோம் ஒவ்வொரு நாளும்
வாரம் ஒன்று முடிந்த பின்னாலும்
ஒன்றை மட்டும் இன்னும் காணோம்
எங்கே சென்றது அந்த விமானம்
என்றே அறியா மக்கள் எல்லாம்
விழித்திருக் கின்றார் இரவும் பகலும்
இறைவா உனக்கு இத்தனை பசியா