மூன்றாவதும் பெண் தான்
பிஞ்சுக்களின்
அழுகுரல்கள்..
பசிக்கான ஓசை !
தாய்மையின்
அரவணைப்பு...
பெருமிதத்தின்
வெளிப்பாடாக !
உச்சமாய்...
கண்களில் உருண்டோடிய
கண்ணீர் !
பார்வையாளரற்ற
அவள் அறை...
“....மூன்றாவதும் பெண்தான்….”
சாபங்கள் எல்லாத்திசைகளிலும்.......!