சோகங்களே கரைந்துவிடு
என் கண்களே கரைத்துவிடு
உன்னில் வற்றாது சுரக்கின்ற
கண்ணீரில் மனதின்சோகமதை
மெல்ல கொல்லும் விசமாய்
மென்மையாம் மொழிபேசி
விடியல்தனை மறைத்துவிட்டு
இருட்டினில் இருக்கவைத்து
இன்முகம்காட்டி துன்புறுத்தும்
இரக்கமற்ற என் நல்லவளே
உயிரெழுத்தில் உயிர்கொடுத்தேன்
அன்புள்ளமது மறைந்துவிட
ஆசைகள் அறவே அறுந்துவிட
இடர்களே என்றும் வீஞ்சிநிற்க
ஈட்டியாய்தைத்த வார்த்தையால்
உண்மையாவும் உருவம் மாறி
ஊமையாய் இங்கு அழுகின்றது
எண்ணங்கள் உருகி வழிகிறது
ஏளனமான கேளிக்கைகளால்
ஐயங்கள் இன்னும் தீரவில்லை
ஒன்றுக்கும் உதவாதேபோன
ஓட்டை விழுந்திட்ட மனமிங்கு
ஒளடதம் தேடியே அலைகிறது
ஒளடதம் = மருந்து
என்றும் உங்கள் அன்புடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..