நட்பு

கதிரறுக்கும் பூமியில் பிறந்த உனக்கு இன்றும் உயிர்
பிறக்கவில்லையா?
தொப்புள் கோடி தானே வேறு ?
வா ஒன்று சேர்ப்போம் உலகத்தை
நண்பா பரிமாறும் உணைவை கூட இங்கு தானே கற்று கொண்டோம்
ஏனோ சிலையாகிறேன் ஒரு சில வேளைகளில் நீ கோபமாக இருக்கும் போது
ஏனோ பறவையாகிறேன் நாம் சிரிக்கும் போது
உடன்பிறந்தவன் கூட என் உயிர் இருக்கும் வரை தான்
உன் கைகள் தான் தூக்கும் என் நான்குப் பக்க படுக்கையை -இறுதி ஊர்வலத்தில்
விட்டு விடுவாயா என்னை ,என் உறவை ?
தயக்கத்துடன் எதிர்பார்க்கிறேன் நன் நட்பை...

எழுதியவர் : சுபா (16-Mar-14, 11:15 pm)
சேர்த்தது : கலைசுபா
Tanglish : natpu
பார்வை : 124

மேலே