அம்மா
விட்டு விட்டு நினைத்தேனே உன்னை நான்
தூரமாய் விட்டதிலிருந்தே நினைப்பாயோ என்னை
அந்த தூரம் கூட உன் ஒரு காலடி தூரம் தான்
எனக்கென்ன ஆகுமோ என்று பதறுவாயே
என் மேல் பால் வாசம் இல்லாத நாள் உண்டு
உன் சுவாசம் என்னை தொடாத நாள் உண்டா?
தள்ளி நின்று எட்டி பார்பாயோ நான் தவழ்வதை
சிற்றெறும்பு என்னை கடிக்க சிட்டென பறந்து
வந்து தட்டி விடுவாயோ
கருவறையை பார்க்கும் வாய்ப்பிருந்தால்
வாழ்வேனே உன்னோடு மறைவாக உள்புகுந்து ...
கண் கலங்கினால் உன்னில் உயிர் கலங்குமோ
உன்னை சுமக்க போகிறேன் உன்னை என் வாழ்நாள் முழுவதும்..
------சுபா