தூக்கமே விழிப்பு

தூக்கமே விழிப்பு{புதுக் கவிதை}
*
தூக்கம் வரவில்லை எனப்
புரண்டுப் புரண்டுப் படுத்தான்.
தூக்காமல் எவ்வளவு நேரந்தான்
விழித்திருப்பதென எழுந்துப் போய்
தண்ணீர்க் குடித்து விட்டு வந்து
படுக்கையில் உட்கார்ந்தான்.
எதையோ யோசித்தவாறு மீண்டும்
படுக்கையில் சாயந்தான்.
*
தூக்கம் வரவில்லை துங்க முயற்சித்தான்
படுத்தவாறே தியானப்
பயிற்சி செய்துப் பார்த்தான்.
தூக்கம் வருவதாகக் காணோம்
மீண்டும் எழுந்துப் போய்
சிறுநீர்க் கழித்து விட்டுவந்துக்
கடிகாரத்தில் நேரம் பார்த்தான்
மணி ஐந்துக் காட்டியது முள்கள்.
*
தூங்க முயற்சிக்காமல் விழித்திருந்தான்
வாசலில் காலிங் பெல் அடிக்கும்
சத்தங் கேட்டுப் போய் கதவைத் திறந்தான்.
எதிரில்,பயணக் களைப்பும்
அசதியுமாய் கலைந்தக் கூந்தலுமாய்
நின்றிருந்தாள். ஊருக்குப் போய்த்
திரும்பி வந்த மனைவி, குழந்தைகள்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவர்களை வரவேற்றதுப் பூனைக் குட்டி…!!

எழுதியவர் : ந.க.துறைவன் (17-Mar-14, 10:43 am)
பார்வை : 111

மேலே